புனித யாத்திரையாக பிரதமரால் பிரகடனம்

செந்திலின் கோரிக்கைக்கு அங்கீகாரம் 

சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து கலாசார திணைகளத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.-சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிக்க வேண்டும் என்ற இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று பிரதமர் இப்பணிப்புரை விடுத்துள்ளார். இந்து கலாசார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது இந்து கலாசார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான், சபரிமலை செல்லும் ஐயப்பன் யாத்திரையை இலங்கை அரசால் புனித யாத்திரையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பான பல ஆவணங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை செந்தில் தொண்டமான் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ , சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து கலாசார திணைகளத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

 

 

 

Fri, 05/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை