சபையில் பெரும்பான்மையை மறைக்க திட்டமிட்ட சதியா?

விசாரணைக்கு SLPP சபாநாயகரிடம் கோரல்

 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்களிப்பின் போது மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக  பொது ஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 150 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தபோதும் ஆதரவு வாக்களிப்பு எண்ணிக்கை 148 என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட போதும் அது ஏதோ வகையில் முறையாக அறிவிக்கப்படவில்லை என்பது பிரச்சனைக்குரிய விடயமாகும்.

மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம். எம்.யூ. அலி சப்ரி மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் வழங்கிய வாக்குகள் இறுதி பெறுபேறுகளை அறிவிக்கும்போது எண்ணிக்கையோடு சேர்த்துக்கொள்ளாமை தெளிவாகிறது. அதற்கிணங்க முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு எவ்வாறு அது இடம்பெற்றுள்தென்பதனையும் அது திட்டமிட்ட ஒரு செயற்பாடா என்பதனையும் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவிப்பது அவசியமாகும். அது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கையை முன் வைப்பதற்கு பொது ஜன பெரமுன கட்சி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை