கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை எதிரணியினர் சீன எதிர்ப்பு நிலையிலிருந்தே பார்க்கின்றனர்

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் சீன எதிர்ப்பு நிலையில் இருந்தே பார்க்கின்றனர் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகரத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் சீன எதிர்ப்பு நிலையில் இருந்தே பார்க்கின்றனர். சீனா இந்த நாட்டின் பிரிவினைக்கு உதவிய நாடு அல்ல. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் மூலம் கிடைத்த உதவிகளை போன்று சீனாவினால் வழங்கப்படவில்லை. அத்துடன் சீனா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பக்கம் இருந்தே செயற்பட்டது.

இதனால் உங்களின் சீன எதிர்ப்புக்கொள்கையை புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த இடத்தில் இருந்து துறைமுக நகர திட்டத்தை பார்ப்பதால் அது வேறு வகையில் தெரிகின்றது.

இந்த நேரத்தில் நாங்கள் புதிதாக கடலை நிரப்பி உருவான நகரத்தைப் பற்றியே கதைக்கின்றோம். இதனால் அதனை புதிய பார்வையிலேயே பார்க்க வேண்டும்.

அந்த நகரில் தேர்தல் நடத்த முடியாது என்று கூறியுள்ளார். ஜே.வி.பியினருக்கு அங்கு தொழிற்சங்கங்களை அமைக்க முடியாது என்றே நினைக்கின்றனர். இது புதிதாக அமையும் நகரமே. இங்கு வெளிநாட்டு முதலீடுகளுடன் வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

அவர்களின் பக்கமிருந்து பார்க்கும் போது இலங்கை முக்கியமனதாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் முதலீட்டை செய்கின்றனர். இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரமே ஊக்குவிக்கப்படும். இதனால் இது நிதி நகரமாக இருக்கும் 25 வீதம் மட்டுமே சீனாவிடம் இருக்கும். இருக்கும் பணத்தை செலவிடுவதற்காக சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இந்த துறைமுக நகரத்திற்கு செல்லலாம். இது ஒருபோதும் இறைமையை மீறி அமைத்த நகரமாக கூற முடியாது. அந்த நகரம் இயற்கையாக இருந்த இடமல்ல. நிலத்தை நிரப்பி உருவாக்கியது என்பதனால் அங்கு உள்ளுராட்சி சபைகள் இருக்க முடியாது. அங்கு தேர்தல் நடக்காது. அது நிதி நகரமாகவே இருக்கும். அங்கு உள்நாட்டவர்களுக்கு வீசாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுவது எல்லாம் பொய்யே என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 05/21/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை