மெக்சிகோவின் மெஸா பிரபஞ்ச அழகியானார்

2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Miss Mexico Andrea Meza crowned Miss Universe 2021

69ஆவது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது.

74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் மெஸா அறிவிக்கப்பட்டார்.

பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3 ஆவது இடத்தைப் பெற்றார்.

Tue, 05/18/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை