பலஸ்தீன பிரச்சினை: இஸ்லாமிய உலகிற்கு இமாம் கமேனி அழைப்பு

பலஸ்தீன பிரச்சினை இஸ்லாமிய உலகிற்கு தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாக உள்ளது என்று ஈரான் உயர்மட்ட தலைவர் இமாம் கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையில் அண்மையில் முடிவுற்ற மோதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“பலஸ்தீனிய தேசத்தை இராணுவ மற்றும் நிதித் துறைகளில் ஆதரிக்க முஸ்லிம் அரசாங்கங்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்க வேண்டும். இது கடந்த காலத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. மற்றும் காஸாவில் உள்ள அடித்தள கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பி இடிபாடுகளை சரிசெய்ய உதவ முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகள் இந்த அழைப்புக்கு ஆதரவாக இருத்தல் வேண்டும். தங்கள் அரசாங்கங்களை இந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் வலியுறுத்த வேண்டும். தங்களால் இயன்றவரை நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு இந்த நாடுகளுக்கு உள்ளது” என்று கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.

தைரியமாக வைராக்கியத்துடன் போராடிய இளைஞர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Wed, 05/26/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை