கொரோனா ஆய்வுகூட கூற்று: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்த புலனாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது அரசியல் ரீதியாக திரித்து கூறப்படுவதாகவும், சீனா மீது பழிபோடும் செயல் என்றும் கூறி சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 16.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 இலட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Sat, 05/29/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை