பாடசாலையில் சிறுமி சூடு; மூவருக்கு காயம்

அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள ஒரு பாடசாலையில், சிறுமி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ரிக்பி இடைநிலை பாடசாலையில் அந்தச் சம்பவம் நடந்தது. தாக்குதலை நடத்திய சிறுமி 6ஆம் வகுப்பில் படிப்பதாகவும், அவருக்கு 11 அல்லது 12 வயது இருக்கும் என்றும் கூறப்பட்டது.

தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்த அந்தச் சிறுமி, பாடசாலைக்கு வெளியிலும் உள்ளேயும் பல முறை சுட்டதாக பொலிஸ் அதிகாரி ஸ்டீவ் ஆண்டர்சன் குறிப்பிட்டார்.

தாக்குதலின்போது, பாடசாலை ஆசிரியர் ஒருவர் சிறுமியிடமிருந்து துப்பாக்கியை மீட்டு, அதிகாரிகள் வரும் வரை அவரைத் தடுத்து வைத்திருந்ததாக ஆண்டர்சன் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தாக்குதலில் 2 மாணவர்களும் ஓர் ஊழியரும் காயமுற்றனர். ஆனால், அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை.

அமெரிக்காவில் தற்கொலை உட்பட கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 43,000க்கும் அதிகம்.

 

Sat, 05/08/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை