காலாவதியான போர்ப் பயிற்சி: சீன இராணுவம் மீது விமர்சனம்

சீன இராணுவ பயிற்சிகள் கடினமானது என்றபோதும் அவை காலாவதியான மற்றும் செயல்திறனற்றவை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது பற்றி சீன இராணுவ நாளிதழில் கடந்த வாரம் வெளியான பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து போட்டியாளர்களும் (நவீன போர்க்களத்தில்) தொழில்நுடுட்பத்தை நம்பியுள்ளனர்’ என்று சீன இராணுவ அகடமியைச் சேர்ந்த ஆய்வாளரான சாங் ஷிசென்ஞ் எழுதியுள்ளார்.

‘போர் நடவடிக்கையில் புதிய உத்திகளை பற்றி அவதானம் செலுத்தி பயிற்சியில் நாம் புதிய மாற்றங்களை கொண்டுவராவிட்டால் எம்மால் இலக்கை நோக்கிச் செல்ல முடியாமல்போகும்’ என்றும’ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில இராணுவ கட்டளை தளபதிகள் தொழில்நுட்பம் பற்றியும் அது எவ்வாறு நவீன போர் நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் என்பது பற்றியும் புரிதலை பெறாதிருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இராணுவத்தை வேகமான மற்றும் திறமையான போர் படையாக மாற்றும் நோக்கில் அதன் ஆயுத அமைப்பை தானியக்கமாக மாற்றும் திட்டத்திற்கு மத்தியிலேயே பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

Tue, 05/04/2021 - 07:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை