டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை திட்டம் நேற்று ஆரம்பம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ மருத்துவமனையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தினால் இத்திட்டம் நிர்வகிக்கப்படவுள்ளது.

ஒன்லைன் பதிவுகளின் ஊடாக டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இதன் போது தெரிவித்துள்ளார்.

Thu, 05/20/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை