பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பிரமாண்ட பிள்ளையார் சிலை

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் A 32 பிரதான வீதி அருகேயுள்ள ஓய்வுப் பகுதியில் பிரமாண்டமான அழகிய பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இருபுறமும் கடல் சூழ்ந்த ரம்மியமான சூழலில் ஏறத்தாழ 10 அடி உயரமான பிள்ளையார் சிலை யாழ்பாணம் - மன்னார் பிரதான வீதியில் பயணிக்கும் மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கண்டி வீதியில் பயணிப்பவர்கள் முறிகண்டிப் பிள்ளையாரை வணங்கிச் செல்வதை போல, குறித்த வீதியில் பயணிப்பவர்களும் அவ் இடத்தில் இறங்கி பிள்ளையாரை வணங்கி ஓய்வெடுத்துக் செல்வது விபத்துக்களை குறைக்க உதவும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் இதே பகுதியில் சிறிய பிள்ளையார் சிலை ஒன்று உருத்திரசேனை என்ற இந்து அமைப்பால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதனை மக்கள் வழிபட்டு வந்த வேளை கடந்த பெப்ரவரி மாதத்தில் இனம் தெரியாத விசமிகளால் குறித்த பிள்ளையார் சிலை இரவோடு இரவாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அதே இடத்தில் மேற்படி பிரமாண்ட பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்கது.

மானிப்பாய் தினகரன் நிருபர்

Thu, 05/13/2021 - 14:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை