யார் விமர்சித்தாலும் எனது பணி தொடரும்

- கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் MP

கல்முனை உப பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் யார் என்ன விமர்சனம் செய்தாலும் சமூகம் சார்ந்த நேர்மையான பணி தொடர்ந்து இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள அவர்,

கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சகோதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் அரசியல் ரீதியாக உப பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அவர்கள் தொடர்ச்சியாக கல்முனை விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபோடுவது போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சூழ்ச்சிசெய்துகொண்டு உதட்டளவில் இனநல்லிணக்கம் பேசுகின்றவர்கள் களத்தில் நின்றுகொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படும் போது குறைந்தது வார்த்தைகளினால் அல்லது எழுத்துக்களினால் கூட கண்டிக்க முடியாதவர்களாக இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை காணப்படுகிறது. எனவே இது சம்பந்தமாக மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்து ஒதுக்கியவர்களும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் என்னை கடுமையாக விமர்சித்து, தாறுமாறாக ஏசினாலும் சரி நானும், என்னுடைய சக பாராளுமன்ற நண்பர்களும் அதற்கு பயந்து நடுங்கி ஒதுங்கிப்போக மாட்டோம். எங்கள் சமூகம் சார்ந்த நேர்மையான பணி தொடர்ந்து இடம்பெறும்.

Wed, 05/05/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை