தொலைக்காணொளி வழியாக அனுஷ்டிக்க சுமந்திரன் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது.

எனினும் தொழில்நுட்பத்தின் உதவியோடு (ZOOM) இணையத்தளத்தின் வழியாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

Tue, 05/18/2021 - 07:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை