தாய்வான் குறித்து குறிப்பிட்ட ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

ஜப்பான் தனது பாதுகாப்பு அறிக்கையில் தாய்வான் பற்றி முதல்முறை குறிப்பிட்டிருப்பது தொடர்பில் ஜப்பானிடம் சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன உள் விவகாரங்களில் ஜப்பான் தொடர்ந்து தலையிடுவதாகவும் அந்த அமைச்சு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன பிரதான நிலத்தில் இருந்து தென் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள சுமார் 24 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக முறையிலான ஆட்சி உள்ள தாய்வானுக்கு சீனா உரிமை கொண்டாடுகிறது.

எனினும் அதிகரித்து வரும் சீனாவின் அழுத்தம் குறித்து அமெரிக்கா மற்றும் தாய்வானுடன் இந்த மாத இறுதியில் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sat, 05/22/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை