துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்; விவாதம் ஒத்திவைப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதத்தை இன்று (05) முன்னெடுக்காதிருப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் பதிலாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட ‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (05) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை சபாநாயகருக்குக் கிடைக்காத காரணத்தால் இன்று (05) இந்த சட்டமூல விவாதத்தை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் இச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,சபை ஒத்திவைப்பு விவாதத்தை மதிய போசன இடைவேளைக்காக இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் இணங்கம் காணப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Wed, 05/05/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை