ஆசியர்களை பாதுகாப்பதற்கு அமெரிக்காவில் புதிய சட்டம்

ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையை முறியடிக்கும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

நோய்ப்பரவல் சூழலில் தாக்குதல்களுக்கு ஆளான ஆசிய அமெரிக்கர்களைப் பாதுகாக்க அந்த சட்டம் வகை செய்கிறது. அந்த சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் இரு கட்சிகளிடமிருந்தும் பெரிய அளவில் ஆதரவு கிட்டியது.

வெறுப்புக் குற்றங்களை மறுஆய்வு செய்தல், அத்தகைய குற்றங்களை இணையம் வழி புகார் செய்வதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு சட்டம் வழிவகுக்கும்.

அது போன்ற தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்தி, பொதுக் கல்வி இயக்கங்களை அதிகரிக்கவும் அது உதவும். நோய்ப்பரவல் சூழலில் ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மார்ச் மாதத்தில், அட்லாண்டா வட்டாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

Sat, 05/22/2021 - 18:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை