கொரோனா ஜனாஸாக்களை கிண்ணியாவிலும் அடக்கலாம்

 சுகாதார பிரிவினர் தகவல் வெளியீடு

கொவிட்19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை தற்போது திருகோணமலை, கிண்ணியா மஹமாரு பகுதியிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள், பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கிண்ணியாவுக்கு விஜயம் செய்து மஹமாரு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதற்கான அனுமதி தற்போது நேற்று (25)கிடைத்துள்ளதாக சுகாதார பிரிவுக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் கிண்ணியாவில் அதற்கான இடம் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உரிய தரப்புகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருமலை குறூப் நிருபர் 

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை