கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் மூன்றாவது கொரோனா சிகிச்சை நிலையம்

- கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் திறந்துவைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. ஆர். எம்.தௌபீக்கினால் சனிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை, குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை ஆகிய மூன்று வைத்தியசாலைகளும் கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்ட நிலையில், குச்சவெளி கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் பெண்கள் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் திருகோணமலை மாவட்டத்துக்குள் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மத்திய சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக நோயாளர்களின் கட்டில்களை அதிகரித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது மத்திய சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி சோபா சுரேனி கும்புரேகம மற்றும் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Mon, 05/10/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை