சமூகத் தொற்று பரவும் ஆபத்துக்கு வாய்ப்பில்லை

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

இந்திய திரிபுபடுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளியான நபரினால் சமூகத்தில் அந்த வைரஸ் தொற்று பரவும் ஆபத்து கிடையாது என இராஜாங்க   அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேற்படி நபர் இரண்டு வார காலங்கள் ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை பெற்று அதன் பின்னர் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டவர் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் என்றும் அவர் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்புடன் செயற்பட்டதனாலேயே அவரை இனங்கண்டு கொள்ள முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்படி நபர் 21 தினங்கள் தனிமையாக இருந்துள்ள நிலையில் அவர் மூலம் சமூகத்துக்கு இந்திய திரிபுபடுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து கிடையாது என தெரிவித்துள்ள அவர் எவ்வாறாயினும் அவர் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்புடன் செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 05/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை