தொற்றாளர்கள் அருகிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுவர்

தொற்றாளர்கள் அருகிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுவர்-COVID19 Patients will Be Send to Nearest Treatment Center

- வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பில் இன்னும் முடிவில்லை
- கட்டில்கள், மருத்துவமனைகள் நிர்மாணிப்பது தீர்வல்ல

கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில், அருகிலுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் இடைநிலை மையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்துவது குறித்து இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லையென, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே கருத்து
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை, மற்றும் அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் காணப்படும் சிக்கல் நிலைகளை கருத்திற் கொண்டு, நோய் அறிகுறிகளற்ற கொவிட்-19 தொற்றாளர்களை இன்று (17) முதல் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.

கட்டில்கள், வைத்தியசாலைகளை அமைப்பது தீர்வல்ல
இதேவேளை, கட்டில்கள் மற்றும் மருத்துவமனைகளை நிர்மாணிப்பதானது, கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வல்ல என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, கட்டில்கள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவது பதில் இல்லை என, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஷா தெரிவித்தார்.

Mon, 05/17/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை