ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் நிரந்தர கொடுப்பனவு

2,500 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 2,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நிதி அமைச்சின் செயலாளர் எஸ்,ஆர். ஆட்டிகலவுக்கு அது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2,500 ரூபாவை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ஆரம்ப பாடசாலை, ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள், கல்விச்சேவை இராஜாங்க அமைச்சுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை