இலங்கையில் 'பைசர்' தடுப்பூசிக்கு அனுமதி

அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்

என்டெக் தடுப்பூசிகளை பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதிகார சபையின் விசேட ஆலோசனை குழுவினால் இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  அதற்கிணங்க வெளிநாடுகளில் இருந்து 50 லட்சம் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தடுப்பூசி, நாட்டில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள மூன்றாவது தடுப்பூசியாகும் என்பதை குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் கொவிஷீல்ட், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை உபயோகப்படுத்த முன்பும் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் தெரிவித்துள்ளார். அதேவேளை எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை கொள்வனவு செய்வதில் நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை