நான் சாதனத்தில் தெளிவாக வாக்களித்தும் எனது வாக்கு பதியப்படாது விட்டமை ஆச்சரியம் தந்தது

விசாரணையில் கண்டறியப்படும்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் வாக்கெடுப்பில் நான் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக மிகத் தெளிவாக எனது வாக்கை இலத்திரனியல் சாதனம் ஊடாக அளித்திருந்த போதும்

அது மொத்த வாக்கெடுப்பில் சேர்க்கப்படாத சம்பவம் குறித்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வாக்கெடுப்பின் போது அமைச்சர் அலி சப்ரியினதும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஆகியோரது வாக்குகள், அவர்கள் இருவராலும் பதியப்பட்ட போதும் அது கூட்டுத் தொகையில் சேர்க்கப்படாமல் விடப்பட்ட சம்பவம் குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏன் இவ்வாறு நடந்தது, இந்த தவறுக்கு யார் காரணம், எப்படி இத்தகைய ஒரு மிக முக்கியமான விடயம் இவ்வளவு கவனயீனமாக விடப்பட்டது என்பது குறித்து எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எனது மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஆகியோரது வாக்குகள் கிடைக்கப் பெற்று அவை சேர்க்கப்பட்டிருந்தால உண்மையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டுக்கும் மேலாக வாக்கு வீதம் கிடைத்திருக்கும். இங்கே எண்ணிக்கையில் தவறு இழைக்கப்பட்ட காரணத்தினால் அந்த சந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணைகள் நடைபெறும் என நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு இதற்கான உரிய காரணம் புலப்படவில்லை. எனினும் காரணத்தை உரிய அதிகாரிகள் விசாரித்து கண்டறிவர் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அமைச்சர் அலி சபரி தெரிவித்தார்.

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை