இணையவழி கல்வியினை தொடர முடியாத நிலையில் துணுக்காய் வலய மாணவர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சு இணையவழி கல்வியினை தொடருமாறு அறிவித்துள்ள நிலையில் துணுக்காய் வலயத்தில் பத்தாயிரம் வரையான மாணவர்கள் இணைய வழி கல்வியினை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

சரியான இணைய வசதிகள் இல்லாத நிலையினால் இணைய வழி கல்வியினை தொடமுடியவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். 

துணுக்காய் வலயத்தில் குறிப்பாக வன்னிவிளாங்குளம், கல்விளான்,கோட்டைகட்டி, அம்பலப்பெருமாள், ஜயன்குளம், உயிலங்குளம்,தென்னியன்குளம், ஒட்டங்குளம், மூன்று முறிப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இவ்வாறான நிலை யில் வலயத்தினை சேர்ந்தவர்களோ பாடசாலை அதிபர்களோ, ஆசிரியர்களோ என்ன செய்வதென்று தெரியாத நிலை காணப்படுகின்றது. கிராமத்தில் இருந்து மக்கள் பல்வேறு தடவைகள் தொலைத்தொடர்பு சேவையினை விரிவு படுத்துமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.   இந்நிலையில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவையில் உள்ளபோது சரியான இணைய வசதியினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கல்வி சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

துணுக்காய் வலயத்தில் 64 பாடசாலைகள் காணப்படுகின்றன ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான சுமார் பத்தாயிரம் வரையான மாணவர்கள் இவ்வாறு இணைய வழி கல்வியினை பெற்றுக் கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.   

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்    

Fri, 05/21/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை