ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் கூடியுள்ள அமைச்சரவையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரையை ஆய்வுசெய்வதற்காக ஜனாதிபதியினால் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது.

மேற்படி குழுவானது அதன் அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்துள்ளது. அதற்கிணங்க அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தலைமயிலான மேற்படி குழுவில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்பில, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 05/19/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை