முள்ளிவாய்க்கால் நினைவு இன்று; வீடுகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்த சித்தார்த்தன் கோரல்

- கொரோனாவை கருத்திற்கொள்ள வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளதால், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டுக் கொண்டார்.

யாழ். நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சித்தார்த்தன் எம்.பி மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய மக்களின் இழப்பை நினைவு கூர்வதற்கு மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றம் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டுச் செல்வோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக நடுவதற்காக கொண்டுவரப்பட்ட கல்லும் களவாடப்பட்டுள்ளது.

இவைகள் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, இந்த நாட்டில் மரணித்த எங்களது உறவுகளை நினைவுகூருவது மாத்திரமன்றி நினைவுச் சின்னத்தைக் கூட வைத்திருக்கக் கூடாதென்ற நிலைமையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இச் செயற்பாடு, தமிழ் மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கக் கூடிய விடயமாக இருக்கின்றது.

இதேவேளை உயிரிழந்தவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டுமென்பதுடன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலிருந்தே தங்களது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tue, 05/18/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை