பைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை

வட கொரியா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரதக் கொள்கையை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டிருக்கும் வட கொரியா, அமெரிக்காவின் மேலாதிக்க இராஜதந்திரத்திற்கு பதலளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

வட கொரிய அணு திட்டம் தொடர்பான அச்சுறுத்தலை இராஜதந்திர ரீதியில், அதேபோன்று கடும் நடவடிக்கை மூலம் தமது நிர்வாகம் கையாளும் என்று ஜோ பைடன் கடந்த புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

கொள்ளை மீளாய்வு ஒன்றை தொடர்ந்து அணு செயற்பாட்டை தணிக்கும் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தபோதும், பைடன் பெரும் தவறை செய்வதாக வட கொரியா சாடியுள்ளது.

‘அவரது அறிக்கை, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக செய்துவரும் வட கொரியா மீதான விரோதக் கொள்கைளை தொடர்ந்து செயற்படுத்துவதையே காட்டுகிறது’ என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு அதிகாரியான க்வோன் ஜங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Mon, 05/03/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை