தடுப்பூசி கேட்டு ஜனாதிபதி கடிதம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உதவி செய்யுமாறு கொங்கோ அரசாங்கத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொங்கோ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேலதிகமாகவுள்ள அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கொழும்பிலுள்ள கொங்கோ தூதரகம் மூலமாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 05/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை