மக்கள் விரைவில் குணமடைய வீட்டிலிருந்தவாறு பிரார்த்தியுங்கள்

மே தினச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள்

நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்கியிருக்கும் இவ்வேளையில் வருடாவருடம் மேதினம், உழைக்கும் மக்களது உரிமைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாக உலக தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் கொவிட் 19 கொரோனா தொற்று மக்கள் மத்தியில் மீண்டும் பரவி ஒரு நிம்மதியற்ற வாழ்வை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக இம்முறை இ.தொ.காவின் மேதின நிகழ்வை கைவிடுவது என்று இ.தொ.கா முடிவு செய்ததையடுத்து இதற்காக செலவிடப்படும் தொகையை எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா பொதுச்செயலாளரும் தோட்டவீடமைப்பு மற்றும் சமூகஉட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது. ,

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 1,000 ரூபா சம்பள கோரிக்கையை, எமது இடைவிடாமுயற்சியின் பின் சம்பள நிர்ணயசபைக்கூடாக பெற்றுக்கொடுத்துள்ளோம். இந்தநாட்டு மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அவர்கள் மிகவிரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இதேவேளை, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம். எமது மக்களின் நலனில் அக்கறையுடனும்,அர்ப்பணிப்புடனும் இ.தொ.கா என்றும் கவனம் செலுத்தும் என்பதை அறியத்தருவதோடு, வீட்டிலிருந்தவாறு சகலரும் இந்தநோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது மேதினச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Sat, 05/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை