புதிய சட்ட மாஅதிபராக சஞ்சய் ராஜரட்ணம் இவ்வாரம் பதவியேற்பு

புதிய சட்ட மாஅதிபராக பதில் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இந்த வாரம் பதவியேற்கவுள்ளார். அவரை சட்ட மாஅதிபராக  நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது.சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இன்று பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

கடந்த இரண்டாண்டு காலப்பகுதிக்கு சட்ட மாஅதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேரா ஓய்வு பெற்ற பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கே பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

 

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை