தமிழின்றி திறக்கப்பட்ட நினைவுப் பலகை; மீண்டும் தமிழுடன்

தமிழின்றி திறக்கப்பட்ட நினைவுப் பலகை; மீண்டும் தமிழுடன்-Electronic Library Funded by China-Plaque Violating Language Rights Replaced

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தின் நினைவுப் பலகை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப வைபவத்தின் போது, திரை நீக்கம் செய்யப்பட்ட குறித்த நினைவுப் பலகையில் அரச கரும மொழியான தமிழ் மொழி இடம்பெற்றிருக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த இலத்திரனியல் நூலகத்தின் நினைவுப் பலகையானது, சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகளில் பொறிக்கப்பட்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

இதன் திறப்பு விழாவில் இலங்கைக்கான சீனத் தூதர் மற்றும் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா ஆகியோர் பங்ககுபற்றியிருந்தனர்.

குறித்த நினைவுப் பலகையில், தமிழ் பதிப்பு இடம்பெறாமை தொடர்பில், பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானினால் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில், தற்போது தமிழ் மொழி உள்ளடக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட நினைவுப் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 05/22/2021 - 15:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை