தடுப்பூசி கொள்வனவுக்கு நிதி தயார்; தேவையான உற்பத்தியே பிரச்சினை

தடுப்பூசி கொள்வனவுக்கு நிதி தயார்; தேவையான உற்பத்தியே பிரச்சினை-Have Enough Fund to Purchase COVID19 Vaccine-Global Production Problem

கொவிட் தடுப்பூசி பெற தேவையான பணம் அரசிடம் உள்ளது எனவும் உலகின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை என்பதே தற்போதைய பிரச்சினையாக இருப்பதாகவும்   ஊடகத்துறை  அமைச்சர்   கெஹெலிய  ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (21)  நடைபெற்ற  கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

உலகில் 193 நாடுகள் தற்போது தடுப்பூசி போட சிரமப்பட்டு வருவதாகவும், இந்த நாடுகளில் 51 நாடுகளுக்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :.

தடுப்பூசி போட அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சிலர் தவறான பிரச்சாரங்களை தெரிவித்து   அரசியல்  இலாபம் காண முயல்கின்றனர்  எனவும் இந்த முக்கியமான கட்டத்தில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய வேண்டாம் என அமைச்சர் அவர்களை   கேட்டுக் கொண்டார்

ரஷ்யாவில்  தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசியின் 50,000 டோஸ் இந்த வாரம் இலங்கைக்கு கொண்டு வர இருப்பதாகவும்  அத்துடன்  அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 1 மில்லியன் கிடைக்கவிருப்பதாக தெரிவித்த அமைச்சர்  இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதில் கண்டி மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது, கண்டி மாவட்டம் கொவிட் தொற்று நோய்க்கு ஆபத்தில் உள்ளது ஆதலால்  தேசிய கொவிட் குழு எடுத்த முடிவுகளின்படி, சம்பந்தப்பட்ட தடுப்பூசிகள் மேல் மற்றும் மத்திய  மாகாணத்திற்கு  வழங்கப்படும் அதேவேளை,  இவ்வாறு   ரஷ்ய  நாட்டில்   தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் முதல் தொகை   கண்டிக்கு வழங்கப்பட்டு, கண்டி மாவட்ட மக்களை முழுமையாக உள்ளடக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மேலும்  கண்டி மாவட்டத்தின்  மெததும்பறை ,பார்த்ததுமபரை , கங்கவடட கோரல  மற்றும் கண்டி  நகர எல்லை பகுதியில் கொவிட்  தொற்றுதளுக்கான  வீரியம் அதிகமாக காணப்படுவதால் குறித்த பகுதி  மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 05/23/2021 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை