தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி

முதலமைச்சராகிறார் ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்த பின் திமுக சந்தித்த முதல் சட்டசபை பொதுத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதில் திமுக 158 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 75 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 1996க்கு பின் முதல் முறையாக திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவியது.

மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக திமுக தனித்து பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடித்து சாதித்துள்ளது. 1991 முதல் 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

வளர்ப்பு மகன் திருமணம், சசிகலாவுடன் சேர்ந்து கும்பமேளாவில் ஆடம்பர குளியல், சொத்து குவிப்பு, ரவுடிகள் அராஜகம் என பல காரணங்கள் இந்த பின்னணியில் இருந்தன. இந்த நிலையில்தான், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அப்போது சினிமாவில் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் இந்த கூட்டணிக்கு பகிரங்க ஆதரவு அளித்தார்.

இந்தத் தேர்தலில், திமுக கூட்டணியில் தமாகாவுக்கு 40 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் 11 இடங்களிலும் போட்டியிட்டன. திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக 168 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 64 இடங்களிலும் போட்டியிட்டன..

மதிமுக 177 இடங்களிலும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் 40 இடங்களிலும், ஜனதாதளம் 16 இடங்களிலும் போட்டியிட்டன. பாமக 116 இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான தமாகா 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாமக 4 தொகுதிகளை வென்றது. மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட மதிமுக பூஜ்யம்தான் பெற்றது. இந்த தேர்தல்தான் திமுக கடைசியாக தனித்து பெரும்பான்மை பெற்ற தேர்தலாகும். 1 சட்டசபை தேர்தலில் திமுக 31 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.

Mon, 05/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை