மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய அடையாள அட்டை பரிசோதனை நேற்று (17) இடம் பெற்றது. பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய அடையாள அட்டையை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் பொலிசார் தேசிய அடையாள அட்டையை பரிசோதனை செய்ததுடன் தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு மாறாக வெளியில் செல்வோரின் அடையாள அட்டை இலக்கங்களையும் சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்து வருகின்றனர்.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வருமாறு பொலிசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

அதே நேரம் வர்த்தக நிலையங்கள் மாலை 6 மணியுடன் மூடப்படல் வேண்டும் எனவும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் இரவு 11 மணியுடன் மூடப்படல் வேண்டுமென காத்தான்குடி கொவிட் தடுப்பு செயலணி வர்த்தகர்களை கேட்டுள்ளது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 05/18/2021 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை