பொகவந்தலாவை லெச்சுமி தோட்ட கீழ் பிரிவில் மண்சரிவு

- அச்சத்தில் மக்கள்

மலையகத்தில் பெரும்பாலான பகுதிகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பிரதேசங்களாகக் காணப்படுகின்றன இப்பிரதேசங்களில் மக்கள் இன்னும் அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வேறு வழியின்றி அதே இடங்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை நிலவும் காலங்களில் தங்களின் இருப்பிடங்களை விட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்படுவதும் பின்னர் அதே இடத்தில் வந்து வசிப்பது மலையகத்தில் வழக்கமாகவுள்ளது. பல தோட்டங்கள் மண்சரிவு அனர்த்தத்தில் புதைந்து ​ேபான சோகத்தை இன்றும் ஜீரணக்கமுடியாதுள்ளது,

அந்தவகையில் பொகவந்தலாவை, லெச்சுமி தோட்ட கீழ்ப்பிரிவு மக்கள் தொடர்ந்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன் நேற்று அப்பகுதியில் உள்ள குடியிருப்பின் முன்பகுதியில் மண் சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்துவரும் நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

113 இலக்க லயன் அறைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சிறிய கற்பாறைகள் சரிந்துள்ளதுடன் மண் திட்டும் சரிந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் லயன் அறைகள் அபாய நிலையில் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் சிறு பிள்ளைகளுடன் பெரும் சிரமங்களை எதிர்நாேக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Wed, 05/05/2021 - 15:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை