மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதியர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையீடு செய்தும் அதிகாரிகள் அசமந்தபோக்கை கடைப்பிடித்தமையால் மன்னார் தாதியர்கள் ஒன்றிணைந்து நோயாளிகளுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படாதவாறு வைத்திசாலை முன்றலில் ஒரு மணித்தியாலம் பதாதைகள் ஏந்தியவண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் ஒரு மணிநேரம் நீடித்தது.

இவ் பொது வைத்தியசாலையில் 134 தாதியர்கள் கடமைபுரிகின்றபோதும் இவ் போராட்டத்தின்போது ஒரு சிலர் கடமையில் ஈடுபட்டதுடன் ஏனையோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

'பி.சி.ஆர் பரிசோதனை கடமையில் ஈடுபடும் தாதியர்கள் கை,கால், முகம் கழுவுவதற்கான இடவசதி செய்து தாருங்கள்', வேண்டாம், வேண்டாம் சர்வதிகார தலைமைத்துவம் வேண்டாம்'. 'அம்புலன்ஸ் வண்டியில் இரவு வேளையில் கடமைக்கு சென்றுவரும் தாதியருக்கு தங்குவதற்கு இடவசதி வேண்டும்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

மன்னார் வைத்தியசாலை தாதியர் உத்தியோகத்தர்களால் 12.05.2021 அன்று வட மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ் கடிதத்துக்கு இன்றுவரை எமக்கு எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமையால் தான் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த முற்பட்டோம்.வைத்தியசாலைக்கு வருவோருக்கும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எவ்வித அசௌரியங்கள் ஏற்படாவண்ணம் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைதுள்ளோம்.

தாதியர் ஆடைகள் மாற்றுவதற்கான சரியான வசதிகள் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் கொவிட் 19 தொற்று நோயாளர்களுக்கான சேவையில் ஒரு தாதி செயல்பட்டால் அவர் தனது உடையை மாற்றவோ அல்லது குளிப்பதற்கான சரியான வசதிகள் இல்லை.

ஒரு மாதத்துக்கு வழங்கப்பட்ட விஷேட விடுமுறையானது கடந்த மார்ச் மாதம் எட்டுநாள் வழங்கப்பட்டது. எமக்கு நான்கு நாட்களே வழங்கப்பட்டன.

தற்பொழுது கர்ப்பிணி தாதிமார்களை சேவைக்கு அழைக்கப்பட வேண்டாம் என எமக்கு ஒரு சுற்றறிக்கை வந்துள்ளபோதும் அவர்களும் தொடர்ந்து சேவைக்கு உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு எங்களுக்குள்ள இந்த குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வேண்டியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

தலைமன்னார் விஷேட நிருபர்

Tue, 05/18/2021 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை