நிந்தவூரில் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் மீது அன்டிஜன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணனின் பணிப்புரைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அலுவலக அதிகாரி வைத்தியர் பறூசா நக்பரின் வழிகாட்டலில், கடந்த வெள்ளிக்கிழமை கொவிட்19 பற்றிய விழிப்புணர்வு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு கொண்டிருந்த வேளையில், பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இம்முற்றுகையானது நிந்தவூர் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியில்லாமல் ஒன்றுகூடலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு பிரதான பாதையில் முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், அங்காடி தெரு வியாபாரிகள், வீதியோரம் முகக்கவசம் அணியாமல் ஒன்று கூடி நின்றவர்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக எச்சரிக்கையுடன் கூடிய சட்ட முன்னெடுப்பும் மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்

Mon, 05/10/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை