ரிஷாட்டின் கைதுக்கு எதிராக கல்முனையில் ஆர்ப்பாட்டம்

- நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக்காட்டி பொலிஸாரால் தடங்கல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும்  ஞாயிற்றுக்கிழமை  (02) கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்ட   கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்த ஆயத்தமான போது நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக்காட்டி கல்முனை பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதனை தடுத்து நிறுத்தினர்.​

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக்கின் வழி நடாத்தலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் மற்றும் கல்முனை  மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ. அப்துல் மனாப், சீ.எம்.முபீத், சட்டத்தரணி சிபான் மற்றும் சட்டத்தரணி அன்சில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் உட்பட பலரும் கலந்து கொள்ள விருந்த வேளை, இதற்கான தடையை பொலிசார் அறிவித்திருந்தனர். ஆனாலும் சட்டத்தரணி அன்சில் மற்றும் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாப் ஆகியோர் அமைதியாக சுலோகங்களை ஏந்தி நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இவ் ஆர்ப்பாட்ட இடத்தில் நின்ற பலருக்கும் சுகாதாரத் துறையினர் பீ.சீ.ஆர். பரிசோதனையினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

Tue, 05/04/2021 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை