வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதுள்ள கோவிட்- 19 நிலைமையின் காரணமாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வெளிநாட்டமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அதன் செயற்பாட்டு நேரத்தை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுப்படுத்தியுள்ளது. 

எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த கொன்சியூலர் சேவைகள் கட்டாயமான முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படும்.

முன் நியமனங்களை மேற்கொள்வதற்காக 0112335942, 0112338836 மற்றும் 0112338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளாம் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Wed, 05/05/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை