பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்

பெருநாள் வாழ்த்துச்செய்தியில் நீதியமைச்சர்

இக்காலம் நமது தேசத்தின் உறுதிக்கான ஒரு சோதனைக் காலம் ஆகும். இந்த ஈத் திரு நாளில், நமது தேசத்திற்காகவும் அயராது உழைக்கும் நமது சுகாதார ஊழியர்களுக்காகவும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடையவும் பிரார்த்தனை செய்வோம் என நீதியமைச்சர் அலி சப்ரி தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுளளதாவது,

உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களுக்கான புனித ரமழான் மாதத்தின் முடிவை ஈத்-உல்-ஃபித்ர் குறிக்கிறது. ரமழான் மாதம் என்பது பிரார்த்தனை, பிரதிபலிப்பு, தர்மம், பணிவுக்கான நேரம், மற்றும் நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உடையவர்களின் கஷ்டங்களையும் புரிந்துக் கொள்ளும் ஒரு நாளாகும். ஈத்-உல்-ஃபித்ர் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும், இது சமூக பகிர்வுகளில் ஒன்றாக கொள்ளப்படுகின்றது.

இந்த ஆண்டு நாங்கள் மிகவும் வித்தியாசமான ஈத் இனை எதிர்கொள்கிறோம். நம் நாடு சவால்கள் மற்றும் கடினமான தீர்வுகளை எதிர்நோக்கி செல்கின்றது. இக்காலமானது நமது தேசம் மற்றும் அதன் குழந்தைகளின் வலிமை மற்றும் உறுதிக்கான ஒரு சோதனை காலம். பண்டிகையானது பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு மகிழ்ச்சிகரமான ஒன்றுக்கூடலாகும். நாம் இவ்வாண்டில் வித்தியாசமான ஒரு முறையில் இதனை கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடுகையில் , அது நம்முடைய அன்புக்குரியவர்களின் சிறந்த நன்மைக்காகவும், நமது தேசத்துக்கான ஒரு கடமையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “ஒருவரின் நாட்டை நேசிப்பது விசுவாசத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்” என கூறி உள்ளார்கள்.

இந்த ஈத் திரு நாளில் , நமது தேசத்திற்காகவும் மேலும் இச் சோதனை காலத்திலும் எம்மை பாதுகாப்பாக வைத்திருக்க அயராது உழைக்கும் நமது சுகாதார ஊழியர்கள் மற்றும் நமது படை வீரர்களுக்காகவும், மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வோம்.

அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ஈத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

 

 

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை