செல்பி மோகத்தால் உயிரை மாய்த்த எழுவர்

- ஜாவா தீவில் கடல் பயணத்தில் அனர்த்தம்

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் செல்பி எடுக்க முயன்றதால், அதில் பயணித்தவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் செய்துள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஜாவா பொலிஸ் உயரதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். எப்படியாயினும், செல்பி மோகத்தால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Tue, 05/18/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை