சீன அமைச்சரின் விஜயம் இரத்து

சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட அவரது விஜயம், தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதை பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நேற்று உறுதிப்படுத்தினார்.  

தொடர்ந்தும் சீன உயர்மட்டத்தினரின் கொழும்பை நோக்கிய விஜயங்கள் அனைத்துலக பார்வைக்குட்பட்டிருந்ததுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் வீஃபெங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

Tue, 05/25/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை