சீனாவில் மற்றொரு தொற்று பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை

வைரஸ் தொற்று பற்றி சீனா பாடம் கற்காதபட்சத்தில் கொவிட் நோய்த் தொற்றை விடவும் மோசமான மற்றொரு பெருந்தொற்றை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வூஹானில் ஏற்பட்ட வைரஸ் தொற்றை சீனா மறைக்க முற்படுவதான குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த வைரஸின் மூலம் இன்றும் அறியப்படாத ஒன்றாக உள்ளது.

சீனாவில் பெருகிவரும் கடலுணவு சந்தைகள் மற்றும் ஆபத்தான ஆய்வுகூட ஆராய்ச்சிகள் பற்றி எச்சரிக்கும் நிபுணர்கள் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றொரு பெருந்தொற்றுக்கு காரணமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வரும் நிலையில் அந்த தொற்று பற்றிய புரிதலை பெற உலகம் முயன்று வருகிறது. இதுவரை இந்த நோய்த்தொற்றினால் 3.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு 700,000 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Sat, 05/29/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை