தேர்தல் முறை, சட்டசீரமைப்பு மக்கள் கருத்தறியும் திட்டம்

பொது மக்களிடம் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள்

தேர்தல்கள், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

அதற்கிணங்க மக்கள் தமது கருத்துக்களை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் முறை மற்றும் வாக்களிப்பு முறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ள பெப்ரல் அமைப்பு அதனை விரைவாக மேற்கொள்வது முக்கியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமைகள் பொருத்தமான மாற்றங்களை எதிர்பார்க்கும் நாட்டு மக்கள் மற்றும் தேர்தல் அமைப்புகள் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கருத்துக்கள் மட்டும் ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். அந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எழுத்து மூலம் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு ஜூன் 19ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்புமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை