மியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு

மியன்மாரில் பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராணுவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

மேற்கு பாகோவின் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நேர்ந்தது.

கடந்த திங்கட்கிழமை இரவு மேலும் இரண்டு நகரங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர், மேக்வே வட்டாரத்தில், மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மியன்மார் இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அது தொடர்பில் சர்வதேச வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மியன்மார் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Wed, 05/05/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை