மட்டக்களப்பு நகருக்குள் உள்நுழைந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு

கொவிட்-19 தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசு எதிர்வரும் யூன் மாதம் 07 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிகளை நேற்று (25) பொலிஸார் கல்லடிப் பாலம் உள்ளிட்ட பிரதான சந்திகளில்  மறித்து திருப்பி அனுப்பினர்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்திய நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அத்தியாவசிய பொருட்களான மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் என்பனவற்றை அருகில் உள்ள கடைகளில் கால்நடையாக சென்று வாங்குமாறு பணித்ததுக்கிணங்க வாகனங்களை மறித்து திருப்பி அனுப்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை நகரில் பொதுச் சந்தைகள், மருந்தகங்கள், மளிகைப் பொருட்கள் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கியதோடு வங்கிகளில் பணத்தேவைகளுக்காக காத்து நின்றதைக் காண முடிந்தது.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Wed, 05/26/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை