பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி; அரசின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும்

பிளாஸ்டிக் உற்பத்தித் தொடர்பில் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுமென  சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது அமைச்சின் அறிவிப்பை விடுக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கட்டடங்களை அமைக்கும்   போது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன்களை மட்டுப்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டில் தற்போது 05 வகையானப் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் இப் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், சில நிறுவனங்கள்  அரசாங்கத்தின் காதைத் திருகி வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கிறது.

எனினும் இந்த நிறுவனங்களுக்கு தான் ஒருபோதும் அடிப்பணியப் போவதில்லையெனவும், அரசாங்கம் விதித்துள்ளக் கட்டுப்பாடுகளை மீறி பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 05/05/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை