செவ்வாயின் முதல் படங்களை அனுப்பியது சீன ஆய்வுக் கலம்

செவ்வாயில் தரையிறங்கிய சீனாவின் ஆய்வு இயந்திரம் தான் எடுத்த முதல் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

அந்த கலம் தரையிரங்கிய பகுதியில் இருந்து முன் பக்கமாக செவ்வாயின் நிலத்தோற்றத்தை காண்பிப்பதாக அந்த படங்கள் உள்ளன. சுரொங் என்ற அந்த ஆய்வு இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது.

அமெரிக்காவுக்கு அடுத்து செவ்வாயில் ஆய்வு கலம் ஒன்றை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடாக சீனா இதன்போது பதிவானது.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ஆய்வு இயந்திரம் குறைந்தது 90 செவ்வாய் நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என்று சீன விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இது செவ்வாயின் வட துருவத்தில் உள்ள உடோபியா பிளானிடியா என்ற பரந்த நிலப்பரப்பில் தரையிறங்கியுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி மையம் தனது வலைத்தளத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.

ஆய்வு இயந்திரத்தை பூமியிலிருந்து சுமந்துவந்த டியான்வென்-1 என்ற விண்கலனை விடுத்து கேப்ஸ்யூலுடன் செவ்வாயில் இந்த இயந்திரம் நுழைந்த தருணம் சிறு வீடியோவாக பதிவாகியுள்ளது.

Fri, 05/21/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை