முஸ்லிம் மாணவி சிங்களப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

2020 ஆம் ஆண்டுக்கான க. பொ. த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மட் சாதிகீன் பாத்திமா புஸ்ரா வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இம்மாணவி வர்த்தகம் ஏ, பொருளியல் ஏ, கணக்கியல் ஏ என மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்று பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இம்மாணவி கண்டி பூருணவத்தையைச் சேர்ந்த முஹமட் சாதிகீன் மற்றும் கதீஜா தம்பதிகளின் புதல்வியுமாவார்.

மாவத்தகம தினகரன் நிருபர்

Thu, 05/06/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை