மாகாண சபை தேர்தல் முறைமை: அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் எம்.பிக்கள் கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான்,எஸ்.வியாழேந்திரன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறை யில் எமது மக்களுக்கான பிரதிநிதித்துவம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், என்பது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதேநேரத்தில் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sat, 05/08/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை