விண்வெளிச் சுற்றுலா பயண திகதி அறிவிப்பு

அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் மக்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தயாராகியுள்ளார்.

தமது புதிய ஷப்பர்ட் ரொக்கெட் மற்றும் கப்சூல் அமைப்பில் வரும் ஜூலை 20 ஆம் திகதி குழு ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக அந்த அமெரிக்க தொழிலதிபரின் புளூ ஒரிஜின் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்தப் பயணத்தில் உள்ளக்கப்படவிருப்பதோடு ஒரு இருக்கை ஒன்லைன் மூலம் ஏலம் விடப்படவுள்ளது.

புதிய ஷப்பர்ட் விமானம் பயணிகளை 100 கிலோமீற்றர் உயரத்திற்கு அழைத்துச் சென்று திரும்பி வரும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மீற்றர் உயரம் மற்றும் 4 மீற்றர் அகலம் கொண்ட நியூ ஷப்பர் ரொக்கெட் முழுமையான மீள் பயன்பாடு கொண்டதாகவும் செங்குத்து நிலையில் புறப்பட்டு, செங்குத்து நிலையில் தரையிறங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Fri, 05/07/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை